சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
150 படங்களை நெருங்கி விட்டவர் சரத்குமார். அரசியலுக்கு சென்றார், எம்.பி.ஆனார். சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார். கடந்த தேர்தலில் கமல் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டார். தோல்வியை சந்தித்தது கட்சி. இதனால் அரசியல் பணிகளுக்கு சற்று ஓய்வு கொடுத்து விட்டு சினிமாவில் பிசியாகி விட்டார். சமீபத்தில் சரத்குமார் நடித்த இரை என்கிற வெப் தொடர் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது அரவிந்தராஜ் இயக்கத்தில், 'பரம்பொருள்' என்ற படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்து வருகிறார். ஒரு காவல் துறை அதிகாரிக்கும், திருடனுக்கும் இடையே நடக்கும் போட்டியே படத்தின் கதை. 'ருத்ரன்' படத்தில் ராகவா லாரன்சுக்கு வில்லனாக நடிக்கிறார். இது தவிர பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கும் இன்னொரு படத்திலும் நடிக்கிறார்.
விஜய்யின் 66வது படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விக்னேஷ் ராஜ் இயக்கத்தில் 'போர் தொழில்' படத்தில் துப்பறியும் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். திருமலை இயக்கும் சமரன் படத்தில் நடிக்கிறார். இதுதவிர சில தெலுங்கு படத்திலும் ஒரு கன்னட படத்திலும் நடிக்கிறார். சரத்குமாரின் 150வது படம் ஸ்மைல் மேன். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இந்த படத்தை நவீன் இயக்குகிறார்.