ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தெலுங்குத் திரையுலகின் சீனியர் நடிகரான சிரஞ்சீவி தனது மகன் ராம்சரணுடன் இணைந்து நடித்துள்ள 'ஆச்சார்யா' படம் நாளை மறுதினம் ஏப்ரல் 29ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது புதிய படங்களுக்கு டிக்கெட் கட்டணங்களை ஆந்திர, தெலங்கானா அரசுகள் உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்தது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சிரஞ்சீவி, “கொரோனா ஊரடங்கு அனைத்து தொழில்களையும் பாதிப்படைய வைத்தது, அதில் சினிமாவும் விதிவிலக்கல்ல. அந்த தாமதத்தால் எங்களது படத்தின் பட்ஜெட் அதிகமானது. நாங்கள் 50 கோடியை வட்டியாக மட்டுமே கொடுத்தோம் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா ?. அந்த 50 கோடியில் ஒரு மீடியம் பட்ஜெட் படத்தை எடுத்து முடித்திருக்கலாம்.
ரசிகர்களுக்கு அற்புதமான விஷுவல் அனுபவத்தைக் கொடுப்பதற்காக நாங்கள் கூடுதலாக செலவு செய்கிறோம். அப்படி செலவு செய்யும் போது அரசாங்கத்திடம் எங்களது படங்களுக்கு கூடுதல் கட்டணம் கேட்பதில் தவறில்லை என நினைக்கிறேன். நாங்கள் பிரபலங்கள், 42 சதவீதம் வருமான வரி செலுத்துகிறோம், இது மற்றவர்களைக் காட்டிலும் அதிகம். அதில் ஒரு சிறு பகுதியை இப்படி கேட்பதில் தவறில்லை. கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இன்னும் நாங்கள் மீள வேண்டும்,” என்று கூறியிருக்கிறார்.