ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகர் நகுலின் மனைவியும், சின்னத்திரை தொகுப்பாளியுமான ஸ்ருதிக்கு மர்ம நபர்கள் செல்போனில் ஆபாச படங்களை அனுப்பி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் பேசிவந்தார். இந்த நிலையில் போலீசிலும் புகார் கொடுத்துள்ளார்.
“ஆபாச வீடியோக்களுடன் ஐ லவ் யு என அனுப்பியுள்ளார். எப்படி இந்த மாதிரி சில ஆண்கள் தெரியாத ஒரு பெண்ணுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிவிட்டு ஐ லவ் யு என மெஸேஜும் அனுப்புகிறார்கள். இது எனக்கு முதல் முறை இல்லை. பலமுறை இதுபோல ஆபாச வீடியோக்கள் வந்துள்ளன" என்று அவர் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். இதை தொடர்ந்து பலரும் அவருக்கு ஆதரவாக பேசினர். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கும்படியும் கூறியிருந்தனர். இதை தொடர்ந்து அவர் சைபர் க்ரைம் போலீசிலும் புகார் அளித்துள்ளார்.