டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் ' நானே வருவேன் '. இந்த படத்தை தாணு தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இதன் மொத்த படப்பிடிப்பும் முடிந்தது. தற்போது தனுஷ் தனது நேரடி தெலுங்கு படமான "வாத்தி '' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். வெங்கி அட்லூரி இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தனுஷிற்கு ஜோடியாக இப்படத்தில் பிரபல நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக புகைப்படத்துடன் தகவலை பகிர்ந்துள்ளார்.




