முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் | பேவரைட் ஆஸ்திரேலிய நடிகையுடன் புத்தாண்டை கொண்டாடிய நதியா | நான் ஹிந்தியில் படம் இயக்கினால் இவர்தான் ஹீரோ : வினோத் |

தமிழ்த் திரையுலகத்தில் சில நகைச்சுவைக் காட்சிகளை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாது. அப்படி ஒரு நகைச்சுவைக் காட்சி பிரபுதேவா, வடிவேலு நடித்த 'மனதைத் திருடி விட்டாய்' படத்தில் உள்ளது. அந்தப் படத்தில் பிரபுதேவா, வடிவேலு, விவேக் ஆகியோர் கூட்டணி காமெடியில் ஒரு கலக்கு கலக்கியது.
படம் பெரிய அளவில் ஓடவில்லை என்றாலும் படத்தில் இடம் பெற்ற நகைச்சுவைக் காட்சிகள் அப்போதெல்லாம் சேனல்களில் அடிக்கடி ஒளிபரப்பாகும். இப்போது கூட அந்தக் காட்சிகளைப் பார்ப்பவர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது.
அதிலும் ஒரு காட்சியில் வடிவேலு, 'சிங் இன் த ரெயின், ஐ வான்ட் சிங் இன் த ரெயின்' என்று பாடி நடிக்கும் காட்சியை யாராலும் மறக்க முடியாது. பிரபுதேவா, வடிவேலு ஆரம்பக் காலத்திலிருந்தே சில படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள்.
பிரபுதேவா, வடிவேலு தற்போது சந்தித்த வீடியோ ஒன்றை பிரபுதேவா பகிர்ந்துள்ளார். அதில் வடிவேலு அந்த 'சிங் இன் த ரெயின்' பாடலைப் பாடி, பிரபுதேவாவைக் கட்டிப் பிடித்து மகிழ்ந்துள்ளார். 'நட்பு' என ஒரே ஒரு வார்த்தையில் அந்த சந்திப்பு பற்றி பதிவிட்டுள்ளார் பிரபுதேவா.