அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா |

சமந்தாவை பொறுத்தவரை தற்போது தெலுங்கு திரையுலகில் பிசியாக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தமிழில் அவர் நடித்து வரும் ஒரே படமான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்த படப்பிடிப்பு தொடர்பாக அவ்வப்போது சென்னை வந்து சென்றார் சமந்தா. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக சமந்தாவை சந்தித்த நடிகர் சதீஷ் அவருடன் எடுத்துக்கொண்ட செல்பி ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு கத்தி பட நினைவுகளையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான கத்தி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் சமந்தா. அந்த படத்தில் விஜய்யின் நண்பனாக நடித்து இருந்த சதீஷூம் சமந்தாவுடன் பல காட்சிகளில் இணைந்து நடித்து இருந்தார். அதன்பிறகு நீண்ட நாளைக்கு பின் சமந்தாவை இப்போதுதான் சந்தித்துள்ளதாக கூறியுள்ள சதீஷ், கத்தி பட நாட்களை மிஸ் பண்ணுவதாக கூறியதுடன் வரும் காலத்தில் சமந்தா நடிக்க உள்ள படங்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.




