சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா என்ற படத்தில் நடித்து முடித்த சமயம் தான் கர்ப்பம் ஆகிவிட்டதால் ஏற்கனவே கமிட் ஆகியிருந்த படங்களில் இருந்து வெளியேறினார் காஜல்அகர்வால். இந்த நிலையில் தனது கர்ப்ப காலத்தில் புகைப்படங்களை அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் காஜல், தற்போதும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஒரு பதிவும் போட்டுள்ளார். அதில், ‛தாய்மைக்கான தயாரிப்பு அழகாக இருக்கும். ஆனால் குழப்பமாக இருக்கும்.
ஒரு கணம் நீங்கள் எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்திருப்பது போல் உணருவீர்கள். ஆனால் அடுத்த கணம் நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள். உறங்கும் நேரத்தை எப்படி நிர்வகிக்க போகிறீர்கள் என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்த நாட்கள் வாரங்கள் மற்றும் மாதங்கள் நம் குழந்தைகள் மற்றும் எங்கள் கூட்டாளர்கள் நேசிப்பதன் மூலம் இந்த உணர்ச்சிகளின் குறிப்பு மகிழ்ச்சி, சோகம், பதட்டம், இதயத்துடிப்பு தமது தனித்துவமான கதைகளை படித்து அவற்றை நம்முடையதாக ஆக்குகிறது என்பதை சில நேரங்களில் மறந்து விடுகிறோம்' என்று கர்ப்ப காலத்தில் பாசிட்டிவாக இருப்பது குறித்து காஜல் விழிப்புணர்வு பரப்பி வருகிறார்.