ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா | பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம் | நடிகர் ஜெய்சங்கர் பெயரிலான சாலை திறப்பு | பாரம்பரியமிக்க ஏவிஎம் தியேட்டர் இடிப்பு | சினிமா கைவிட்டால் படிப்பை வைத்து பிழைத்துக் கொள்வேன்: சிவகார்த்திகேயன் | சினிமா நடிகைகளுக்கு சவாலாக களமிறங்கும் ஏஐ அழகிகள் : ஏஐ.,யில் உருவான இசை ஆல்பம் வைரல் | ஏஐ தொழில்நுட்பத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சன்னி லியோன் |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கத்ரினா கைப், நடிகரான விக்கி கவுஷல் ஆகியோர் காதலித்து 2021ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 42 வயதான கத்ரினா தற்போது தாய்மை அடைந்துள்ளார். அது குறித்து கடந்த வாரங்களில் சில தகவல்கள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து தற்போது கத்ரினா, விக்கி இருவருமே அது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
தாய்மை வயிறுடன் கூடிய புகைப்படத்தைப் பகிர்ந்து, “எங்களது வாழ்க்கையின் சிறந்த அத்தியாயத்தைத் தொடங்கும் வழியில், மகிழ்ச்சி மற்றும் நன்றியுணர்வு நிறைந்த இதயங்களுடன்,” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் பதிவை அவர்கள் இன்ஸடா தளத்தில் பகிர்ந்த ஒரு மணி நேரத்தில் 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். பல சினிமா பிரபலங்கள் இருவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.