லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி கடந்த 2023ம் ஆண்டு சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த சங்கீதா, திடீரென்று சீரியலில் இருந்து வெளியேறினார். அதையடுத்து அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அவரும் அதை சோசியல் மீடியாவில் உறுதிப்படுத்தினார்.
தற்போது கர்ப்பகால போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி உள்ள சங்கீதா, அது குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார். அதோடு, என்னுடைய வயிற்றில் குழந்தை வளர்ந்து வருவதை உணர்வது என்பது ஆச்சரியமானதும் அதிசயமானதும் ஆகும் என்று அவர் ஒரு பதிவு போட்டுள்ளார். அதோடு இன்னொரு புகைப்படத்தில் ஆண் குழந்தை, பெண் குழந்தை உடைகளை வைத்திருக்கிறார். அதை பார்த்து, என்னுடைய வயிற்றில் இருப்பது ஆணா? பெண்ணா? என்று கேள்வி எழுப்புகிறாரா? இல்லை ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என இரட்டை குழந்தை எனது வயிற்றில் இருப்பதை சங்கீதா இப்படி வெளிப்படுத்துகிறாரா என்று சோசியல் மீடியாவில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.