திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா | மம்முட்டி பட இயக்குனருக்கு வெற்றியை தருவாரா சவுபின் சாஹிர் ? | 10 நாள் அவகாசத்துடன் மீண்டும் ஆரம்பமான கன்னட பிக்பாஸ் 12 | விஜய்க்கு பவன் கல்யாண் ஆலோசனை சொன்னாரா? | ஏஆர் முருகதாஸை வறுத்தெடுத்த சல்மான் கான் | காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! |
முன்னாள் முதல்வர் கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதிய 'கலைஞரின் கண்ணம்மா' என்ற படத்தை இயக்கி, தயாரித்தவர் பாபா விக்ரம். இந்த படத்தில் மீனா நாயகியாக நடித்திருந்தார். பிரேம்குமார் ஹீரோவாக நடித்திருந்தார். இதுதவிர என் இதய ராணி, பொம்மை நாய்கள் உள்ளிட்ட சில படங்களை தயாரித்து, இயக்கி உள்ளார். கடைசியாக இமான் அண்ணாச்சி ஹீரோவாக நடிக்கும் அதிர்ஷ்டம் என்ற படத்தை இயக்கி வந்தார்.
83 வயதான பாபா விக்ரம், முதுமை காரணமாக சினிமாவில் இருந்து விலகி தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கு அன்ன பாபா ஆலயம் என்ற பெயரில் சாய்பாபாவுக்கு ஓர் ஆலயத்தை நிறுவி வழிபாடு செய்து வந்தார்.
கடந்த சில மாதங்களாகவே பல்வேறு உடல்நல பிரச்சினைகளில் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவருக்கு லட்சுமி என்கிற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.