ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
பொதுவாக திரையுலக பிரபலங்கள், குறிப்பாக நடிகர் நடிகைகள் தாங்கள் வாகனங்களில் பயணிப்பது யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காகவும் ரசிகர்களின் அன்புத்தொல்லையில் இருந்து தப்பிப்பதற்காகவும் தங்களது கார் கண்ணாடிகளில் கருப்பு பிலிம்களை ஒட்டி வலம் வருகின்றனர். இந்தியாவில் 2012லிருந்து இப்படி கருப்பு நிற பிலிம் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஆந்திராவில் தற்போது போக்குவரத்து போலீஸார் இதை கடுமையாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் சமீபத்தில் மார்க்கெட் பகுதியில் அப்படி கருப்பு பிலிம் ஒட்டப்பட்ட ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் பயணித்தது தெரிய வந்துள்ளது. பிரபல நடிகராக இருந்தாலும் விதிமீறல் என்பதால் ரூ.700 அபராதம் விதித்து, அதனை வசூலித்த பின்னரே அவரை அனுப்பி வைத்தனராம். அல்லு அர்ஜுனும் எந்தவித் வாக்குவாதத்திலும் ஈடுபடாமல் அபாரத தொகையை செலுத்திவிட்டு அமைதியாக சென்றுவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.