ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தில் இளம் வயது திரிஷாவாக நடித்தவர் கவுரி கிஷன். இந்த ஒரே படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்த கவுரி கிஷன், அதை தொடர்ந்து தெலுங்கிலும் ரீமேக்கான 96 படத்தில் தனது கேரக்டரில் மீண்டும் தானே நடித்தார். இந்தநிலையில் தற்போது தெலுங்கில் ஸ்ரீதேவி சோபன்பாபு என்கிற படத்தில் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் கவுரி கிஷன். சந்தோஷ் சோபன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
எண்பதுகளில் கிட்டத்தட்ட பத்து படங்களுக்கு மேல் இணைந்து நடித்த ஹிட் ஜோடி தான் ஸ்ரீதேவியும் சோபன்பாபுவும்.. அதனால் இந்தப்படத்திற்கு இவர்கள் இருவரின் பெயரையே டைட்டிலாக வைத்துள்ளார்கள்.. இந்த படத்தை சிரஞ்சீவியின் மூத்த மகள் சுஷ்மிதா தயாரித்துள்ளார். பிரசாந்த்குமார் திம்மலா என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் டீசரை சமீபத்தில் நடிகை சமந்தா வெளியிட்டார்..
கிராமத்து இளைஞனாக சந்தோஷும், நகரத்து மாடர்ன் பெண்ணாக் கவுரியும் நடித்துள்ளனர். கிராமத்தில் உள்ள ஒரு வீடு யாருக்கு சொந்தம் என இவர்களுக்குள் ஏற்படும் மோதலை மையமாக வைத்து காமெடி கலந்து இந்தப்படம் உருவாகியுள்ளதாம்.