கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு |

விஷால், டிம்பிள் ஹயாதே, யோகி பாபு, பாபுராஜ், ரவீனா ரவி, மாரிமுத்து உள்பட பலர் நடித்துள்ள படம் வீரமே வாகை சூடும். து.பா.சரவணன் என்ற புதுமுகம் இயக்கி இருந்த இந்தப் படத்தை விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷாலே தயாரித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார், கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
அதிகாரம் படைத்தவரின் மகன் செய்யும் தொடர் பாலியல் கொலைகளை கண்டுபிடித்து அழிக்கும் ஒரு பயிற்சி போலீஸ் அதிகாரியின் கதை. கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி தியேட்டரில் வெளியிடப்பட்ட படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து தற்போது டிவி சேனலிலும் ஒளிபரப்பாகிறது. வருகிற 10ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) மாலை 6 மணிக்கு ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிறது.