'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
விஜய் ஆண்டனி நடித்து வரும் படங்களில் ஒன்று கொலை. விடியும் முன் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாலாஜி குமார் இயக்கி உள்ளார். விஜய் ஆண்டனியுடன் ரித்திகா சிங் , ஜான் விஜய், ராதிகா சரத்குமார், முரளி சர்மா, மீனாட்சி சவுத்ரி, சித்தார்த்தா சங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார், சம்கித் போரா உள்பட பலர் நடித்துள்ளனர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார், கிரிஷ் கோபாலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படம் 1923ல் நடந்த ஒரு மாடல் அழகியின் கொலையை கருவாக கொண்ட உண்மை கதையை தழுவிய படமாகும். இதுபற்றி இயக்குனர் பாலாஜி குமார் கூறியதாவது: 1923ல் நடந்த டோரதி கிங்கின் கொலை சம்பவத்தை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. அந்த கொலை சம்பவம் உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த கொலையின் பின்னால் உள்ள மர்மத்தை அறிய உலகம் துடித்தது. அதுதான் இந்த படம்.
இந்த கொலை சம்பவத்தை நவீன கால பின்னணிக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டியது இருந்தது. லீலா என்ற மாடல் அழகி கொல்லப்படுகிறார். அவரது ஆண் நண்பர்களில் 5 பேருக்கு அவர் இறந்தால் பலன் இருக்கிறது. அதில் கொலையாளி யார் என்பதை துப்பறியும் நிபுணர் விஜய் ஆண்டனி கண்டுபிடிப்பதே படத்தின் திரைக்கதை. என்கிறார் இயக்குனர் பாலாஜி குமார்.