ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
சன்னி லியோன் தமிழில் நடித்து வரும் படம் ஓ மை கோஸ்ட். சன்னி லியோனுடன் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா நடித்துள்ளனர். யுவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜாவித் ரியாஸ் இசையமைத்துள்ளார். தீபக் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் இந்த படம் ரிலீசாக உள்ளது.
இயக்குனர் யுவன் கூறியதாவது: இந்தப்படம் ஒரு வரலாற்று திகில் நகைச்சுவை கலந்த படம். இது முக்கியமாக பொழுதுபோக்கு மற்றும் ஹாரர் அம்சத்தை அடிப்படையாகக் கொண்டது. இப்படம் திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு ஒரு சிறப்பான பொழுதுபோக்கு அனுபவமாக இருக்கும். சன்னி லியோனை சுற்றித்தான் கதை நடக்கும். இந்த படம் சன்னிக்கு தமிழில் நல்லதொரு என்ட்ரியை கொடுக்கும். இந்த படத்தில் சன்னி லியோனை ஏன் நடிக்க வைத்திருக்கிறார்கள் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கும். படம் வெளிவரும்போது அதற்கான பதில் கிடைக்கும், என்கிறார் யுவன்.