'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் சார்பாக மகேஷ்வரன் நந்தகோபால் தயாரிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியிருக்கும் படம் 'சிட்தி'. இந்த படத்தை பயஸ் ராஜ் இயக்கியுள்ளார். அஜி ஜான் கதாநாயகனாக நடித்துள்ளார். அக்ஷயா உதயகுமார் மற்றும் ஹரிதா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். ரமேஷ் நாராயணன் இசை அமைத்துள்ளர்.
சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவன் சிட்தி தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கொலையாளியாக மாறுகிறார். அவர் ஏன் கொலையாளியாக மாறினார் ? இறுதியில் என்ன நடந்தது என்பது படத்தின் கதை.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு நடிகர் ஆரி பேசியதாவது: நலிந்த தயாரிப்பாளர்களுக்கு என்னால் என்ன செய்ய முடியும், ஒரு நலிந்த தயாரிப்பாளரை காட்டுங்கள் ஒரு ரூபாய் பணம் வாங்காமல் நான் நடித்து தருகிறேன். இதே உதவியை நான் நடிகர் சங்கத்திற்கும் செய்ய தயாராக இருக்கிறேன். நீங்கள் கேஜிஎப் ரசிகராக இருந்தாலும் ஓகே, பீஸ்ட் ரசிகராக இருந்தாலும் சரி படத்தை தியேட்டரில் வந்து பாருங்கள்.
இவ்வாறு ஆரி பேசினார்.