ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் 'நானே வருவேன்' . இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடந்து வருகிறது .
அடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் வாத்தி படத்திலும் நடிக்க இருக்கிறார் தனுஷ் . இந்த படத்தை இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார் . ஜி வி பிரகாஷ் இசையமைப்பில் பாடல்கள் உருவாகி வருகிறது. இன்று இயக்குனர் வெங்கி அட்லூரியின் பிறந்தநாளை முன்னுட்டு தனுஷ் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வாத்தி படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார் . இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது .