நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
மும்பை:'பாலிவுட்'டின் பிரபல நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மீதான பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட்டின் பிரபல நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, 50, ஹிந்தி மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி பாடல்களுக்கு, நடனம் அமைத்துள்ளார். பல விருதுகளை பெற்ற இவர், சமீபத்தில் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்று பிரபலமான, 'ஊ சொல்றியா... மாமா...' என்ற பாடலுக்கும் நடனம் அமைத்தார்.
கடந்த 2020ல், நடனக் குழுவில் இருந்த ஒரு பெண்ணை, கணேசும், அவரது உதவியாளரும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, அந்தப் பெண் அளித்த புகாரில், மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை கணேஷ் மறுத்தார். இந்நிலையில், இந்த வழக்கில், மும்பை போலீசார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.