டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ஹாலிவுட் நடிகை கங்கனா ரணவத் மனதில் பட்டதை துணிச்சலுடன் பேசக்கூடியவர்.. பாலிவுட்டில் நிலவும் நெபோடிசத்துக்கு எதிராக குரல் கொடுத்து வரும் கங்கனா, இந்த நெபோடிசத்துக்கு தலைவர் என தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோஹரை அவ்வப்போது வார்த்தைகளால் குறிவைத்து தாக்கி வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் பனிப்போர் ஒன்றும் புதிதல்ல. என்றாலும், வாய்ப்பு கிடைக்கும் சமயத்தில் கரண் ஜோஹரை சீண்டுவதற்கும் கிண்டலடிப்பதற்கும் கங்கனா தயங்குவதில்லை.
அந்தவகையில் தற்போது கங்கனா ரணவத் ஓடிடி தளத்தில் லாக்கப் என்கிற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட 19 நாட்களுக்குள்ளேயே 200 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இந்த சந்தோசத்தை பகிர்ந்து கொண்ட கங்கனா, இதன்பிறகு கூறியதுதான் மறைமுகமாக கரண் ஜோஹரை கிண்டலடிப்பது போல அமைந்துள்ளது..
இதுபற்றி பதிவிட்டுள்ள கங்கனா, “இந்த 20௦ மில்லியன் பார்வைகள் என்கிற வெற்றியை ஒரு குறிப்பிட்ட சிலரால் ஜீரணிக்க முடியாது.. அந்த கூட்டத்தை வழிநடத்தும் 'பப்பா ஜோ' இந்நேரம் கண்ணீர் விட்டு கதறி கொண்டிருப்பார்.. இந்த நிகழ்ச்சியை தடுப்பதற்கு எத்தனையோ வழிகளை கையாண்டார்கள்.. இப்போது 200 மில்லியன் பார்வைகளை கடந்துவிட்ட நிலையில் இனி அடுத்து என்ன திட்டம் தீட்டுகிறார்கள் என பார்ப்போம்.. உங்களுக்கு அழுவதற்கு இங்கே இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன 'பப்பா ஜோ' என்று அதில் கூறியுள்ளார் கங்கனா ரணவத். பப்பா ஜோ என்பது கரண் ஜோஹரைத்தான் குறிக்கிறது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.