கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் | த மெட்ராஸ் மிஸ்டரி : அது சாந்தனு அல்ல, யோஹன் சாக்கோ | மீண்டும் வெப் தொடரில் நடிக்கும் சித்தார்த் | இளயராஜாவை பார்த்து வளர்ந்தவன் நான்: ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம் | 21ம் தேதி நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் | ஆன்லைன் சூதாட்ட வழக்கு: ஊர்வசிக்கு சம்மன் |
பிரணயகாலம் என்ற மலையாள படத்தில் அறிமுகமான அஜ்மல், அஞ்சாதே படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன்பிறகு டின் 07 ஏஎல் 4777, திருதிரு துறுதுறு, உள்பட சில படங்களில் நடித்தார். கோ படத்தின் மூலம் வில்லன் ஆனார். அதன்பிறகும் ஹீரோவாக நடித்த அஜ்மல் கடைசியாக வெற்றிச் செல்வன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இதில் அஜ்மலுக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்தார்.
இந்த படத்திறகு பிறகு அஜ்மல் பல படங்களில் நடித்தாலும் வில்லன், இரண்டாவது நாயகன் கேரக்டரில் தான் நடித்தார். தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு தீர்க்கதரிசி என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். இதனை சுந்தரபாண்டியன், கோ.மோகன் என்ற இரட்டையர்கள் இயக்குகிறார்கள். பி.சதீஷ்குமார் தயாரிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.