பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
தமிழில் மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படம் மூலம் அறிமுகமானவர் அஜ்மல். தொடர்ந்து மலையாளத்திலும் தமிழிலும் கதாநாயகனாக வில்லனாக என இப்போதும் ஒரு பிசியான நடிகராகவே நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஒரு வேனல் புழையில் என்கிற மலையாள படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை விமலா ராமன் நடிக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் நடிகர் அஜ்மல் 16 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் பிரணய காலம் என்கிற படத்தில் அறிமுகமானபோது அதில் அவருக்கு ஜோடியாக விமலா ராமன் தான் நடித்திருந்தார்.
தற்போது 16 வருட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் மூலம் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள நடிகர் அஜ்மல் கூறும்போது, "பிரணய காலம் படத்தில் ஒன்றாக நடித்த பிறகு கடந்த 16 வருடங்களில் விமலா ராமனை எங்கேயும் சந்தித்தது கூட இல்லை. ஆனால் இத்தனை வருடம் கழித்து மீண்டும் இணைந்து நடிக்கிறோம் என்றால் இது நிச்சயமாக ஒரு மிராக்கில் தான்" என்று கூறியுள்ளார்.