அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் |

விஜய்யின் லியோ படம் வெளியாகி விட்டது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் தென் ஆப்ரிக்கா சென்றுள்ளனர்.
இதில் மைக் மோகன், ஜெயராம், சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர் என தகவல் வெளியானது. தற்போது இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அஜ்மல் நடித்து வருவதாக கூறப்பட்டு வந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் விஜய் 68வது படப்பிடிப்பு தளத்தில் விஜய்யுடன் அஜ்மல் உள்ள போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அஜ்மல் ஏற்கனவே தமிழில் ‛‛கோ, அஞ்சாதே, இரவுக்கு ஆயிரம் கண்கள், நெற்றிக்கண்'' ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இது அல்லாமல் மலையாள, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.