'லோகா' வெற்றி: இயக்குனர் ஜீத்து ஜோசப் எச்சரிக்கை | ஓடிடி : முதலித்தில் 'சாயரா', இரண்டாமிடத்தில் 'கூலி' | பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' |
தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 34வது படத்தில் நடித்து வருகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு காரைக்குடி, தூத்துக்குடி பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, கவுதம் மேனன், யோகி பாபு உள்ளிட்டோர் இப்படத்தில் நடிப்பதைத் தொடர்ந்து இப்போது தெலுங்கு நடிகர் முரளி ஷர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார். கடந்த 11 வருடங்களில் பட்டத்து யானை, பாயும் புலி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக முரளி ஷர்மா உடன் தனது 34வது படத்தில் இணைந்து நடிப்பது குறித்து நெகிழ்ச்சியாக விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.