ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் |
கேஜிஎப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் அதன் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்க, யஷ், கிர்த்தி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று பெங்களூருவில் பிரம்மாண்டமாய் நடந்தது.
கேஜிஎப் 2 திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாள் ஏப்ரல் 13 ஆம் தேதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் படமும் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. எனவே கேஜிஎப் 2 மற்றும் பீஸ்ட் படங்களுக்கும் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்று கருத்துக்கள் எழுந்தது .
இதுப்பற்றி கேஜிஎப் 2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் யஷ் "இது கேஜிஎப் படத்திற்கும் பீஸ்ட் படத்திற்கும் இடையே நடக்கும் போட்டியல்ல. இரு படங்களும் இணைந்தே வெளியாகின்றன. இது ஒன்றும் தேர்தல் அல்ல. இரண்டு படங்களையும் மக்கள் பார்க்க முடியும். விஜய் மிகப்பெரிய நடிகர். அவர் அடைந்த உயரத்தை குறைத்து மதிப்பிட முடியாது. அவரது கலை பணியும் மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் தன்மையையும் என்னோடு ஒப்பிட முடியாது. நான் கண்டிப்பாக பீஸ்ட் பார்ப்பேன். அதே போல விஜய் சாரின் ரசிகர்களுக்கும் கேஜிஎப் பிடிக்கும் என நம்புகிறேன். நாம் இணைந்து இந்த இரு படங்களையும் கொண்டாடுவோம்" எனக் கூறியுள்ளார்.