ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமனிதன்'. இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா முதன்முறையாக இணைந்து இசையமைத்துள்ள படம் இது.
இப்படத்தின் வெளியீட்டு உரிமையை நடிகர் ஆர்கே சுரேஷ் வாங்கியுள்ளார். இப்படம் குறித்த ஒரு அப்டேட்டை படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார். படத்தைப் பார்த்து ரஜினிகாந்த் பாராட்டிய பதிவுதான் அது. “ஜனவரியில் மாமனிதன் படம் பார்த்து பாராட்டி,நெகிழ்வாக தொலைபேசியில் நீங்கள் பேசியதை வெளியே சொல்லவில்லை. அது விற்பனைக்காக நான் சொல்வதாக சொல்வார்கள் நீங்கள் படம் பார்த்ததே ஆசிகள் அதுபோதும் என்றேன். இன்று வெளியீட்டு தேதி தானாகவே விற்பனையாவும் முடிந்தது சார். நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார். படத்தின் வியாபாரம் அனைத்தும் முடிந்த பிறகே இந்தப் பதிவை சீனு வெளியிட்டுள்ளார்.