லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
எர்ணாகுளத்தில் பிறந்து துபாயில் படித்து வளர்ந்தவர் மானசா. கண்ணேனிரும் மதுரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அதன்பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தார். தியான் என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதன்பிறகு காட்டு, கிராஸ்ரோட்ஸ், சில்டரன்ஸ் பார்க், விகடகுமாரன், உறியடி உள்பட பல படங்களில் நடித்தார்.
பரமகுரு என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமாவதாக இருந்தார். அந்த படம் தாமதமாகி வருகிறது. இந்த நிலையில் எமோஜி என்ற வெப் தொடரின் மூலம் தமிழுக்கு வருகிறார். இதில் அவர் மஹத் ராகவேந்திரா ஜோடியாக நடிக்கிறார். இன்னொரு நாயகியாக தேவிகா சதீஷ் நடிக்கிறார். ஆடுகளம் நரேன், ஆஷிக், பிரியதர்ஷினி ராஜ்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். திருமணமான தம்பதி தாங்கள் இருவரும் பிரிய நினைக்க, அவர்களை காதல் இணைத்ததா? என்பது தொடரின் ஒன்லைன். ரங்கசாமி எழுதி இயக்கியுள்ளார்.