ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை |
சமீபத்தில் பிரபாஸ் பூஜா ஹெக்டே நடிப்பில் பான் இந்தியா படமாக ராதே ஷ்யாம் வெளியானது. ராதா கிருஷ்ணகுமார் இயக்கியிருந்த இந்தப்படம் ரிலீசுக்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் படம் வெளியான பிறகு ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஆக்ஷன் காட்சிகள் இல்லாததும், முழுநீள காதல் கதையாக இருந்ததும் ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்தது. இதனால் தியேட்டர்களில் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் வருகை குறைந்ததுடன் படம் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கு மேல் நட்டம் அடைந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஆந்திராவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாபு கோகிநேனி என்பவர் இந்த படம் குறித்தும் இந்த படத்தில் கைரேகை ஜோதிட வல்லுனராக நடித்திருந்த பிரபாஸ் குறித்தும் கிண்டலாக பதிவிட்டுள்ளார். இந்த படத்தின் நாயகன் விக்ரமாதித்யா கைரேகை பார்த்து மற்றவர்களின் எதிர்காலத்தை சொல்பவராக நடித்துள்ளார். இந்த படம் ஒப்புக் கொள்வதற்கு முன்பு தயாரிப்பாளரின் கைரேகைகளை அவர் பார்த்திருந்தால் இவ்வளவு பெரிய நட்டம் வருவதை தவிர்த்திருக்கலாமே என்று கூறியுள்ளார். மேலும் இந்த படம் குருட்டுத்தனமான நம்பிக்கைகளையும் வாட்ஸ் அப்பில் பரப்பப்படும் பதிவுகளையும் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.