பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தில் மலைவாசி பெண் செங்கனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மலையாள நடிகை லிஜோமோல் ஜோஸ். அதற்கு முன்னதாக தமிழில் சித்தார்த்துக்கு ஜோடியாக சசி இயக்கத்தில் சிவப்பு மஞ்சள் பச்சை என்கிற படத்தில் நடித்திருந்தாலும் ஜெய்பீம் படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளம் பெற்றுத் தந்தது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியான மகேஷின்டே பிரதிகாரம் படத்தில் அறிமுகமான லிஜோமோல் மலையாளத்தில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
அடுத்து தமிழில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்ததும் மலையாளத்திலிருந்து இவரை தேடி பட வாய்ப்புகள் வருவது குறைந்து விட்டதாம். ஆனால் ஜெய்பீம் படத்தின் வெற்றிக்கு பிறகு இவரைத்தேடி மீண்டும் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் தற்போது புலிமட என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், விஷுத மேஜோட் என்கிற படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார் லிஜோமோல். விரைவில் இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றனவாம்.




