ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

புதியவர்கள் நடித்துள்ள ‛காதல் செய்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா இளையராஜாவின் கோடம்பாக்க ஸ்டூடியோவில் நடந்தது. இதில் இளையராஜா, பாரதிராஜா, பி.வாசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பாரதிராஜா, இளையராஜா இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்டார்கள். கட்டி அணைத்துக் கொண்டார்கள். இருவருக்கு ஒரே ரோஜா மாலை அணிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இருவரின் இணைப்பு விழாவாகவே நடந்தது.
இந்த விழாவில் இளையராஜா பேசியது தான் ஹெலைட் அவர் பேசியதாவது: நிகழ்கால பாரதிராஜாக்களே... நிகழ்கால இளையராஜாக்களே... நிகழ்கால பி.வாசுக்களே.... ஏன் எதிர்கால பாரதிராஜாக்களே, இளையராஜாக்களே... ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் எல்லா காலத்துக்கும் பாரதிராஜா ஒருவர் தான். பி.வாசு, இளையராஜா ஒருவர் தான். எப்படி சூரியன் மாதிரி இன்னொன்று வருவதில்லையோ. அதுபோல ஒருத்தர போல இன்னொருத்தன் வருவதில்லை. அதுலாம் பொறந்து வரணும்யா.
திருவள்ளுவரே சொல்லி இருக்காரு 'செல்வம் படச்சவனா இருக்குறது வேறுஞ் தெள்ளியவனா இருக்குறது வேறுஞ் தெள்ளியவன்னா தெளிந்த அறிவோடு இருக்குறவன் தெய்வமா கூட இருக்கலாம்.. ஆனா தெளிந்த அறிவுடையவனா இருக்குறது கஷ்டம்.
இந்த படத்துக்கு காதல் செய்னு பேர் வச்சுருக்காங்க... என்ன போல காதல் செய்யுறவன் இருக்க முடியாது. ஆனா நான் எத காதலிக்குறனும்கிறதுல தெள்ளியனா இருக்கேன். இந்த படத்தோட விழாவுக்கு இவளோ பேர் வந்து ஆதரவு கொடுத்திருக்கீங்க. 16 வயதினிலே பண்ணும்போது இவ்ளோ கேமரா கிடையாது. இவ்ளோ மீடியா கிடையாது. படக்குழுவுக்கு வாழ்த்துகள். என்றார்.
இளையராஜா இவ்வளவு ஜாலியாக இதுவரை பேசியதில்லை. சமீபகாலமாக அவரது பேச்சுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.