மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛பீஸ்ட்'. ஆக் ஷன் பட பாணியில் தயாராகி உள்ள இந்த படம் ஏப்ரலில் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாய் நடந்தது வந்தது. சமீபத்தில் அந்த பணிகளும் முடிந்து படம் சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்சாரில் படம் ‛யு/ஏ' சான்று பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ‛பீஸ்ட்' படம் ஏப்., 13ல் தியேட்டர்களில் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்திலிருந்து ‛‛அரபிக் குத்து..., ஜாலியோ ஜிம்கானா...'' என இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளன. படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.