டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நேரம், பிரேமம் என இரண்டே படங்களை மட்டும் இயக்கியிருந்தாலும் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களிடையேயும் தனது முத்திரையை அழுத்தமாக பதித்தவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். குறிப்பாக இவர் இயக்கிய இரண்டு படங்களின் மூலம் அழகும் திறமையும் வாய்ந்த நான்கு கதாநாயகிகளை திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர்
ஆனால் பிரேமம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக படம் இயக்காமல் இருந்த அல்போன்ஸ் புத்ரன் தற்போது பிரித்விராஜ், நயன்தாரா ஜோடியாக நடிக்கும் கோல்டு என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் அல்போன்ஸ் புத்ரன் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடியபோது ரசிகர் ஒருவர் விஜய்யை வைத்து எப்போது படம் இயக்குவீர்கள் என்கிற கேள்வியை கேட்டார். அதற்கு பதிலளித்த அல்போன்ஸ் புத்ரன், "பிரேமம் படம் வெளியானதும் தமிழ்நாட்டில் இருந்து எனக்கு முதல் வந்த பாராட்டு அழைப்பு நடிகர் விஜய்யிடம் இருந்து தான். அதன்பிறகு அவரை நான் பர்சனலாக நேரிலும் சந்தித்து பேசினேன். ஒருநாள் அவர் என்னை அழைத்து படம் இயக்க சொல்லுவார் என நம்புகிறேன். அதற்காக காத்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.




