திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
தமிழ் சினிமாவில் விஜய் எப்படியோ, அப்படித்தான் தெலுங்கில் மகேஷ்பாபு. இருவரது ரசிகர்களும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டுக் கொள்வார்கள். மகேஷ்பாபுவின் சில படங்களை விஜய் தமிழில் ரீமேக் செய்து நடித்ததில் ஆரம்பித்த சண்டை தற்போது வெவ்வேறு வடிவங்களில் போய்க் கொண்டிருக்கிறது.
விஜய் நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் 'பீஸ்ட்'. மகேஷ்பாபு நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் 'சர்க்காரு வாரி பாட்டா'. இப்படத்தின் முதல் சிங்கிளான 'கலாவதி' பாடலை கடந்த மாதம் பிப்ரவரி 13ம் தேதி யு டியுபில் வெளியிட்டனர். வெளியிட்ட 24 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்தது. ஆனால், மறுநாள் 'பீஸ்ட்' பாடலின் முதல் சிங்கிளான 'அரபிக்குத்து' வெளியாக அந்த சாதனையை உடனடியாக முறியடித்தது. 'அரபிக்குத்து' பாடல் 24 மணி நேரத்தில் 17 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. அப்போதைய போட்டியில் மகேஷ் பாபுவை முந்தி விஜய் சாதனை படைத்தார்.
இப்போது மீண்டும் அப்படி ஒரு போட்டி ஏற்பட உள்ளது. 'பீஸ்ட்' படத்தின் இரண்டாவது சிங்கிளான 'ஜாலிலோ ஜிம்கானா' இன்று வெளியாகிறது. 'சர்க்காரு வாரி பாட்டா'வின் இரண்டாவது சிங்கிளான 'பென்னி' பாடல் நாளை யு டியூபில் வெளியாகிறது. இப்பாடலில் மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா நடித்துள்ளார். இரண்டாவது சிங்கிள் போட்டியில் விஜய், மகேஷ்பாபு இருவரில் யாருடைய படம் சாதனை படைக்கப் போகிறது என்ற போட்டி மீண்டும் ஏற்பட்டுள்ளது.