மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஹாலிவுட் திரைப்படங்களில் ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து போராடும் அமெரிக்க உளவாளியாக நடித்தவர் அர்னால்ட். அவர் தற்போது உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு ரஷ்ய அதிபருக்கும், வீரர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
இது சட்ட விரோதமான போர், உலகமே கண்டிக்கும் இந்த போரில் உங்கள்(ரஷ்ய) ராணுவ வீரர்களின் வாழ்க்கை, உங்கள் எதிர்காலத்தினை தியாகம் செய்கிறீர்கள். கிரெம்ன்ளின் (ரஷ்ய தலைமையகம்) மாளிகையில் ஆட்சியில் உள்ளவர்களை கேட்கிறேன், உங்கள் சொந்த இலக்குக்காக ஏன் இளம் வீரர்களை தியாகம் செய்கிறீர்கள்.
ரஷ்ய வீரர்களே, 1 கோடியே 10 லட்சம் ரஷ்யர்களின் சொந்தங்கள் உக்ரைனில் உள்ளனர். நீங்கள் சுடும் ஒவ்வொரு தோட்டாவும் உங்கள் சகோதர சகோதரிகளை சுடுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் . ரஷ்யா தான் இந்த இந்தப் போரைத் தொடங்கியது. இது ரஷ்ய மக்களின் போர் அல்ல. இந்தப் போரைத் நீங்கள் தான் தொடங்கினீர்கள். நீங்கள் தான் இந்தப் போரை முன் எடுத்து செல்கிறீர்கள். நீங்கள் நினைத்தால் இந்தப் போரை உங்களால் நிறுத்த முடியும்.
இவ்வாறு அவர் அதில் பேசியிருக்கிறார்.