ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

ஜேம்ஸ் கேமரூன் இயக்கி உலக வரவேற்பை பெற்ற அவதார் படத்தின் 3ம் பாகம் 'அவதார்: பயர் அண்ட் ஆஷ்' என்ற பெயரில் தயாராகி உள்ளது. இந்த படம் வருகிற 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தியாவில் ஆங்கிலத்துடன் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இந்த படத்தின் பிரமாண்ட புரமோசன் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் கலந்து கொண்டார். அர்னால்ட் தனது படங்கள் தவிர்த்து பிற படங்களின் நிகழ்வில் கலந்து கொள்வது அபூர்வமானது என்பதால் இதனை ஹாலிவுட் திரையுலகம் ஆச்சர்யத்துடன் பார்க்கிறது.
அர்னால்ட் தனது நீண்டகால நண்பரான இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுக்கு தனது ஆதரவை வழங்கினார். பல ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் நல்ல நட்பில் இருந்து வருகின்றனர். 'தி டெர்மினேட்டர்' திரைப்படத்தில் இணைந்த இருவரும் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளனர்.