லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் மற்றும் பலர் நடிக்க 2018ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'கனா'.
இப்படம் இந்த வாரம் மார்ச் 18ம் தேதி சீனாவில் வெளியாக உள்ளது. இது பற்றிய அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகி இருந்தது. இப்படம் சீனாவில் வெளியாவது குறித்து படத்தைத் தயாரித்த சிவகார்த்திகேயன் தன்னுடைய மகிழ்ச்சியை வெளியிட்டிருந்தார்.
“எங்களது நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 'கனா' படம் சீனாவில் மார்ச் 18ம் தேதி வெளியாவது சூப்பர் மகிழ்ச்சி. கனா குழுவுக்குப் பெருமையான ஒரு தருணம்” என்று சிவகார்த்திகேயன் ஏற்கெனவே பதிவிட்டிருந்தார்.
கிரிக்கெட் விளையாட ஆசைப்படும் ஒரு கிராமத்துப் பெண்ணின் சாதனைப் பயணம் தான் இந்த 'கனா'. விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இந்தப் படம் தெலுங்கில், 'கௌசல்யா கிருஷ்ணமூரத்தி' என்ற பெயரில் ஐஸ்வர்யா நடிக்க ரீமேக் ஆகி வெளிவந்தது. ஹிந்தியில் 'நாட் அவுட்' என்ற பெயரில் டப்பிங் ஆகி யு டியுபில் வெளியிடப்பட்டு 78 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.