இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'ராதேஷ்யாம்'. பான்-இந்தியா படமாக ஐந்து மொழிகளில் வெளியான இந்தப் படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லாமல் மிகவும் மோசமாக இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கைத் தவிர மற்ற மொழிகளில் இப்படத்தின் வசூல் 'டிசாஸ்டர்' என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. நேற்று திங்கள் கிழமை என்பதால் நேற்றைய தினம்தான் இப்படத்தின் உண்மை நிலவரம் என்னவென்று தெரிய வரும் என காத்திருந்தார்கள். தெலுங்கிலேயே பல தியேட்டர்களில் மக்கள் வரவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்திற்கு பெரிய நஷ்டம் ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த வாரம் ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' படம் வெளியாக உள்ள நிலையில் 'ராதேஷ்யாம்' எபெக்ட் 'ஆர்ஆர்ஆர்' படத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது. பிரபாஸ் படம் ஆக்ஷன் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்த்து காதல் படத்தைப் பார்த்து ஏமாந்து போனார்கள் ரசிகர்கள்.
'ஆர்ஆர்ஆர்' படம் சுதந்திரப் போராட்டக் கதை என்றாலும் அதன் நேட்டிவிட்டி, கதைக்களம் தெலுங்குப் பிரதேசத்தைச் சேர்ந்தது. அதை மற்ற மொழிகளில் எப்படி ரசிக்கப் போகிறார்கள் என்பது படம் வரும் போதுதான் தெரியும்.