அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், அஜித் நடித்த 'வலிமை' படம் வெளிவந்து 25 நாட்கள் ஆகிவிட்டது. மீண்டும் இதே கூட்டணி அஜித்தின் 61வது படத்தில் இணைய உள்ளது. ஆனால், இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தெரிகிறது.
அதற்குள் அஜித்தின் 62வது படம் பற்றிய தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. லைக்கா தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் அந்தப் படம் உருவாக உள்ளதாம். நயன்தாரா நாயகியாக நடிக்கலாம் என்றும், அஜித்தின் 61வது படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இந்த 62வது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் சிலர் பரப்பி வருகிறார்கள்.
அஜித் படங்களைப் பொறுத்தவரையில் வெளியாகும் அப்டேட்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து முதலில் வெளிவருவதில்லை. அப்படியிருக்கையில், இந்த அப்டேட்கள் வேண்டுமென்றே 'லீக்' செய்யப்படுகிறதா அல்லது சம்பந்தப்பட்ட சிலரே இவற்றை வெளியில் வெளியிடுகிறார்களா என்றும் தெரியவில்லை.
இப்படித்தான் 'வலிமை' படத்தின் பின்னணி இசையை யுவன் அமைக்கவில்லை, ஜிப்ரான் தான் அமைத்துள்ளார் என்று 'லீக்' செய்தார்கள். படம் வெளிவந்த பின் கூட தயாரிப்பாளர் போனி கபூர் அது பற்றி குழப்பமான பதிலைத்தான் சொன்னார். கடைசியாக யுவனே அதைத் தெளிவுபடுத்தினார்.
அஜித்தின் 61வது படத்திற்கு இசை ஜிப்ரான், 62வது படத்திற்கு இசை அனிருத் என்கிறார்கள். இனி, மீண்டும் அஜித், யுவன் கூட்டணி இணைவது சந்தேகம் என்றும் கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.