‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் |
தமிழ் சினிமாவின் சீனியர் நடிகர்களில் மிக முக்கியமானவர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக 1960ல் அறிமுகமாகி 2022 வரை சினிமாவில் நாயகனாக தொடர்வது மாபெரும் சாதனை என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
கடந்த நான்கு வருடங்களாக கமல்ஹாசன் நடித்த படங்கள் எதுவும் வரவில்லை. கடைசியாக அவர் நடித்து 2018ல் வெளிவந்த 'விஸ்வரூபம் 2' படம் அவரது ரசிகர்களைக் கூட திருப்திப்படுத்தவில்லை. அதற்கடுத்து 'இந்தியன் 2' படத்தில் அவர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்தது மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால், அந்தப் படம் அப்படியே அந்தரத்தில் நிற்கிறது. இருப்பினும் அந்த சோகத்தை மறக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்' படம் பற்றிய அறிவிப்பு அவரது ரசிகர்களை மீண்டும் மகிழ்ச்சியில் தள்ளியது.
கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் படத்தைத் திட்டமிட்டபடி சீக்கிரமே முடித்துவிட்டார்கள். இன்று படத்தின் வெளியீட்டுத் தேதியும் ஜுன் 3 என அறிவிக்கப்பட்டுவிட்டது. படம் வெளிவர இன்னும் இரண்டரை மாதங்கள் இருந்தாலும் நான்கு வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் படத்தைத் தியேட்டர்களில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.