ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
வினோத் இயக்கத்தில், அஜித்குமார், ஹுமா குரேஷி மற்றும் பலர் நடித்த 'வலிமை' படம் கடந்த மாதம் பிப்ரவரி 24ம் தேதி உலகம் முழுவதும் நான்கு மொழிகளில் வெளியானது. அஜித் நடித்த படம் ஒன்று ஒரே நாளில் இத்தனை மொழிகளில் வெளியானது இதுவே முதல் முறை.
இப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து கடந்த சில நாட்களாக தேவையற்ற சர்ச்சைகள் எழுந்து வருகிறது. தெலுங்கு, ஹிந்தியில் சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது படத்தின் வசூல் விவரங்களை அதன் தயாரிப்பாளர்கள் அறிவிப்பது வழக்கம்.
கடந்த வாரம் வெளியான 'ராதேஷ்யாம்' படத்தின் வசூல் என்ன என்பதைப் பற்றி தினமும் அதன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து வருகிறது. அது போல தமிழில் எந்த ஒரு தயாரிப்பாளரும் அறிவிப்பதில்லை.
கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா சிக்கலால் தியேட்டர்களுக்கு மக்கள் வருகை குறைவாகவே இருக்கிறது. ஆனாலும், கடந்த வருடம் ஜனவரியில் விஜய் நடித்து வெளிவந்த 'மாஸ்டர்' படம் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது என்ற தகவல் வெளியானது. அதை திரையுலகத்தில் உள்ள யாரும் மறுக்கவில்லை.
ஆனால், 'வலிமை' படம் 200 கோடி ரூபாய் வசூல் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகிறது. ஆனால், படம் 100 கோடி வசூலைக் கூடத் தாண்டவில்லை என சிலர் அறிவிக்கிறார்கள்.
ஒரு படம் சம்பந்தப்பட்ட வசூலை அதை வாங்கிய வினியோகஸ்தர்களும், வெளியிட்ட தியேட்டர்காரர்களும் கூட தயாரிப்பாளர்களுக்கு சரியாகத் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது. கடந்த வருடத்தின் முக்கிய வெற்றிப்படமான 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி அந்த குற்றச்சாடைக் கூறியிருந்தார்.
அப்படியிருக்கும் போது 'வலிமை' படத்தின் வசூல், இவர்களுக்கு எப்படி கிடைக்கும் ?, கிடைக்க வாய்ப்பேயில்லை. எனவே, படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் உண்மை வசூல் விவரத்தை வெளியிட வேண்டும் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.