நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக நடிகை ஒருவர் வரப்போவதாக தகவல் வெளியாகியது. அவர் முந்தைய சீசனின் போட்டியாளர் என்பதால் பலரும் லாஸ்லியா மற்றும் ஓவியாவை எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் ரம்யா பாண்டியன் என்ட்ரி கொடுத்துள்ளார். பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த ரம்யா சக போட்டியாளர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். தனிப்பட்ட முறையில் அனிதாவிடம் அவர் விளையாடும் விதம் தவறு எனவும் அறிவுரை கூறியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 4-ல் டாப் 5 போட்டியாளராக முக்கியத்துவம் பெற்ற ரம்யா பாண்டியன் போட்டியின் போது விஷப்பூச்சி என்ற பட்டப்பெயர் வாங்கினார். பிக்பாஸ் அல்டிமேட்டில் அதிரடியாக என்ட்ரி கொடுத்திருக்கும் அவர் விட்டதை பிடித்து பட்டம் வெல்வாரா என ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.