நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் |

கார்த்தி நடித்த மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் அன்பறிவ் மாஸ்டர்ஸ். அதனையடுத்து இதுவரை நூறுக்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் புத்தாண்டு அறிவிப்பாக ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை இவர்கள் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. இந்தநிலையில் அந்தப்படத்தை தாங்கள் இயக்கவில்லை என தற்போது அறிவித்துள்ளனர் அன்பறிவ் சகோதரர்கள்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், “தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பணியாற்றுவதால் எங்களது வேலைப்பளு காரணமாக இந்தப்படத்தை இயக்குவதில் இருந்து நாங்கள் விலகியுள்ளோம். இயக்குனராகும் கனவில் சினிமாவுக்கு வந்து சண்டை பயிற்சியாளர்களாக மாறியவர்கள் தான் நாங்கள். அப்படிப்பட்ட எங்களுக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பை மிஸ் பண்ணுகிறோம் என்பது நன்றாகவே தெரிகிறது. ஆனாலும் இந்த முடிவை எடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. அதேசமயம் இந்தப்படத்தில் சண்டை பயிற்சியாளர்களாக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்” என்றும் கூறியுள்ளனர்.




