துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
தமிழில் முன்னணி நாயகனாக வலம் வந்த மாதவன் தற்போது நடிப்பதை குறைத்துக் கொண்டாலும் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‛டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். ஹிந்தியில் சில படங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் படம் 'பென்ஸ்' . லோகேஷ் கதையில் உருவாகும் இப்படத்தை ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கின்றார்.
எல்.சி.யுவின் கதைகளத்தை மையப்படுத்தி தான் இப்படம் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில் இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மாதவனை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாதவன் இதற்கு முன்பு தமிழில் ஆயுத எழுத்து படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.