துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
நடிகை மீனாட்சி சவுத்ரி தெலுங்கில் ஹிட், கில்லாடி, குண்டூர் காரம், லக்கி பாஸ்கர் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் சிங்கப்பூர் சலூன், தி கோட் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது மீனாட்சி சவுத்ரி அளித்த பேட்டி ஒன்றில், அவர் கூறியதாவது : "தந்தை ராணுவ வீரர் என்பதால் மிகவும் கட்டுப்பாடுகளுடன் வளர்ந்தேன். பள்ளி, கல்லூரி காலகட்டத்தில் இருந்தே என்னை விளையாட்டுகளில் பங்கேற்க வைத்தார். பேட்மின்டனில் மாநில அளவில் கலந்து விளையாடியுள்ளேன். அவர் என்னை விளையாட்டு வீராங்கனையாக்க முயன்றார். ஆனால், நான் கதாநாயகி ஆவேன் என கனவில் கூட நினைக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.