பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற தமிழ் படத்தில் ஜெய் ஜோடியாக நடித்தவர் யாமி கவுதம். இப்போது அவர் பாலிவுட்டின் முன்னணி நடிகை. அவர் நடித்து சமீபத்தில் வெளியான தி தேர்ஸ்டே என்ற படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் அவர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடவும், அவர்களது மறுவாழ்வுக்காக பணியாற்றவும் முன்வந்துள்ளார். இதற்காக அவர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் மறுவாழ்வுக்காக தொடர்ந்து ஆதரவளித்து செயல்படும் இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் நான் கைகோர்த்ததை பெருமிதத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்தப் பிரச்சினைகளில் பணியாற்ற வேண்டிய அவசியம் பெண்களிடம் இருந்து வருகிறது.
பெண்களுக்கான பாதுகாப்புச் சிக்கல்கள் அதிகரித்து வருகிறது. அதனால் நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. என்.ஜி.ஓக்களுடன் எனது தொடர்பு ஆரம்பம் தான், எதிர்காலத்தில் பெண்களைப் பாதுகாப்பதற்கும் ஆதரவளிப்பதற்கும் உதவுவதில் மேலும் பங்களிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.




