கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'விக்ரம்'. இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவுற்றது. படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு, மார்ச் 14ம் தேதி காலை 7 மணிக்கு வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்று அறிவித்தது.
இந்த மார்ச் மாதம் வரும் வாரங்களில் 'எதற்கும் துணிந்தவன், ராதேஷ்யாம், ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இவற்றின் வெளியீட்டுத் தேதி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் “மன்மத லீலை, கேஜிஎப் 2, பீஸ்ட்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. ஒவ்வொரு பெரிய படத்திற்கும் இடையில் இரண்டு வார இடைவெளியை வினியோகஸ்தர்கள் விரும்புகிறார்கள்.
'கேஜிஎப் 2' படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 'பீஸ்ட்' படமும் அதே தினத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனவே இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு ஏப்ரல் 28ம் தேதி 'விக்ரம்' படம் வெளியாகும் என கோலிவுட்டில் ஒரு தகவல் பரவியது. அதனால் தான் தயாரிப்பு நிறுவனம் பட வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்பு மார்ச் 14ல் வெளியாகும் என்று அறிவித்தார்களாம்.
இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்தால் அன்று படம் வெளியாகலாம். அல்லது ஜுன் மாதம் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்கிறார்கள். சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டான்' படம் மே 13 வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது பள்ளி இறுதித் தேர்வுகள் நேரம் என்பதால் 'விக்ரம்' படத்தை வெளியிடுவார்களா என்பதும் சந்தேம்தான். சரியான தேதி எது என்பதைத் தெரிந்து கொள்ள 'விக்ரம்' ரசிகர்கள் இன்னும் பத்து நாட்கள் காத்திருக்க வேண்டும்.