டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் இல்லற வாழ்க்கையின் பிரித்தலுக்கு பிறகு இருவரும் அவர்களது வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் . சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தார். அதே நேரத்தில் தான் இயக்கி வரும் மியூசிக் ஆல்பம் படப்பிடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார். முஸாபிர் என்கிற ஆல்பம் பாடலை அன்கித் திவாரி இசையமைப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.
மூன்று மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் பாடலை தமிழில் அனிருத் பாடியுள்ளார். அதேபோல தெலுங்கு மொழியில் பாடகர் சாகர் மற்றும் மலையாள மொழியில் ரஞ்சித் கோவிந்தும் பாடியுள்ளனர். இந்நிலையில் இந்த பாடல் மார்ச் 8 ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஐஸ்வர்யா அறிவித்துள்ளார் .




