ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
தமிழ் திரைப்பட முன்னணி இயக்குனர்கள் தற்போது தெலுங்கில் படங்களை இயக்கி வருகிறார்கள். இயக்குனர் ஷங்கர், லிங்குசாமி போன்ற இயக்குனர்கள் தெலுங்கில் தங்களது படங்களை இயக்கி வருகின்றனர். மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் மோகன்ராஜா இயக்கி வருகிறார் .
இந்நிலையில் மோகன்ராஜா மீண்டும் நடிகர் நாகார்ஜூனாவை வைத்து தெலுங்கில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். நாகார்ஜூனாவின் நூறாவது படமான இப்படத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.