'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் அபிநய். கணிதமேதை ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு படமாக ராமானுஜன் என்ற படத்தில் இவர் நாயகனாக நடித்தவர். பிக்பாஸ் சீசன்- 5 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது அதே நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த நடிகை பாவனி உடனான காதல் சர்ச்சையிலும் சிக்கினார். அதையடுத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளும் கலந்துகொண்டு பின்னர் எலிமினேட் ஆனார்.
இந்த நிலையில் அபிநயின் மனைவி அபர்ணா, சோசியல் மீடியாவில் அபர்ணா அபிநய் என்று பதிவிட்டு இருந்த தனது பெயரை அபர்ணா வரதராஜன் என்று சமீபத்தில் திருத்தம் செய்து கொண்டார். இதனால் இவர்கள் பிரிந்துவிட்டதாக செய்திகள் பரவின்.
இந்நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு அபிநய் பதிலளித்தார். ஒரு ரசிகர் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் விவாகரத்து ஆகிவிட்டதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு, ‛‛இது முற்றிலும் தவறான செய்தி. யாரோ இப்படி ஒரு வதந்தியை பரப்பிவிட்டு கொண்டிருக்கிறார்கள். நானும் எனது மனைவியும் சந்தோசமாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பதில் அளித்த அபிநய், மனைவியுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.