ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழ் சினிமாவில் 1980 - 90களில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர்தான் விஜயகாந்த். இவர் நடித்து வந்த காலகட்டத்தில் ரஜினியும், கமலும் முன்னணி நடிகராக திகழ்ந்தார்கள். ஆனபோதிலும் விஜயகாந்துக்கு என்றும் ஒரு ரசிகர் வட்டம் இருந்து வந்தது. அதோடு ரஜினி-கமல் படங்களுக்கு போட்டி போட்டுக் கொண்டு அவரது படங்களும் வசூல் சாதனை புரிந்து வந்தன.
விஜயகாந்தை பொருத்தவரை குடும்ப பின்னணி மற்றும் போலீஸ் கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து தேமுதிக என்ற கட்சியைத் தொடங்கி கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் அவர்களுக்கு எதிரான ஒரு அதிரடி அரசியலை செய்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கும் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் விஜயகாந்த் ஒரு கேரக்டரில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தற்போது விஜயகாந்தின் சமீபத்திய புகைப் படமொன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் கம்பீரமாக இருந்த விஜயகாந்த், உடல்நலக்குறைவால் உடல் இளைத்து முகமே மாறி அடையாளம் தெரியாத தோற்றத்துக்கு மாறி இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்களும், தேமுதிக தொண்டர்கள் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.