அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு |
பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க- 2 படத்தை அடுத்து சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் சூர்யாவுடன் பிரியங்கா மோகன், திவ்யா துரைசாமி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, வினய் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். டி.இமான் இசையமைத்திருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் மார்ச் 10ம் தேதி வெளியாகிறது.
இந்தப்படத்தின் தமிழ் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில் தெலுங்கு டீசர் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் சூர்யா தனது சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார். இந்த நிலையில் அடுத்தபடியாக நந்தா, பிதாமகன் படங்களை தொடர்ந்து பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போகிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. விரைவிலேயே அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தற்போது ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை சூர்யாவே தயாரித்து நடிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.